Tuesday, December 23, 2008

கம்யூனிஸ்டுகள் பார்வையில் இந்துத்துவம்




கம்யூனிஸ்டுகள் பார்வையில் இந்துத்துவம்

மகாபாரதம்-இந்து மதத்தின் ஒரு காப்பியம்.அதன் ஒரு முக்கிய பாகம் பகவத்கீதை.
பகவத்கீதையின் முக்கிய சாரம்சம்,”கடமையைச் செய்.பலனை எதிர்பாராதே!”என்பது.

இதற்கு நிஜ விளக்கம் என்னவென்றால் உனது இப்போதைய வேலையை செய்துமுடி।முடித்த உடனே,அதற்கான பலனை எதிர்பார்த்துக் காத்திருக்கவேண்டாம்.அப்படி காத்திருந்தால் உனது அடுத்தடுத்த வேலைகள் பாதிக்கும்.எனவே,நீ செய்து முடிக்கும் வேலைகளுக்கான பலன் நிச்சயம் உன்னைத் தேடிவரும்.எனவே,அடுத்து உள்ள வேலைகளை உடனுக்குடன் செய்துமுடி.

ஆனால், கம்யூனிஸ்டுகள் இதற்கு எப்படி விளக்கம் தந்தார்கள் தெரியுமா?
கடமையை செய்.பலனை எதிர்பாராதே.என்று பகவத்கீதையில் கிருஷ்ணனே கூறியுள்ளான்.பார்த்தாயா..
தோழா.. .. வேலை செய் ஆனால் சம்பளம் கேட்காதே
-கிருஷ்ணன் முதலாளித்துவத்தை ஆதரிக்கிறான்।

கி।பி.1990களில் சோவியத் ரஷ்யாவானது கம்யூனிஸத்திலிருந்து விலகி ஜனநாயகப்பாதைக்குத் திரும்பியதால்,அந்த நாடு பல துண்டுகளாக உடைந்தது.

அப்போது,அந்த நாட்டின் உயர் வெளியுறவு அதிகாரி சொன்னது:நாங்கள் மதத்தை நசுக்கிக் கொன்றுவிட்டோம்.ஆன்மீக உணர்வை பரப்பாமல் இருந்ததால் முதலாளித்துவம் எங்களை வென்றுவிட்டது.
உங்கள் நாட்டின் ஆன்மீக ஒருங்கிணைப்பிற்கு நாங்கள் தலைவணங்குகிறோம்.நீங்கள் நிச்சியமாக முதலாளித்துவத்தைத் தோற்கடிப்பீர்கள்

No comments:

Post a Comment