Tuesday, December 23, 2008

நாத்திகவாதிகள் பார்வையில் இந்துத்துவம்-பெரியாரின் கருத்துடன்




நாத்திகவாதிகள் பார்வையில் இந்துத்துவம்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நாத்திகம் என்றாலே அது ஈ.வே.ராமசாமியின் கொள்கைவழித் தோன்றல்களான அண்ணா,மு.கருணாநிதி,வீரமணி... போன்றவர்கள்தான்.
ஆனால்,இவர்களில் ஒருவர்கூட ஈ.வே.ராமசாமி என்ற பெரியாரைப் புரிந்துகொள்ளவில்லை என்பது தான் நிஜம்.

ஆம்! ஈ.வே.ராமசாமி தனது திராவிடர் கழகம் மூலமாக ஒரு புத்தகம் வெளியிட்டார்.அந்த புத்தகத்தின் தலைப்பு-நான் ஏன் நாத்திகனானேன்?
அதில் ஈ.வே.ராமசாமி கூறியுள்ளார்:
வெளிநாட்டுமதங்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.எனது வைதிக தர்மம் சிறப்பாக இருக்கவேண்டும்.இன்று(1960களில்)-எனது இந்துமதத்தில்-கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றுவேலைகள் மட்டுமே நடக்கிறது.எனவே,எனது மதத்தை என்னால் ஆன மட்டும் சீர்திருத்துவேன்.
இன்று மு.கருணாநிதி போன்ற பகுத்தறிவுப் பகலவன்கள்
தன்னைப் பெற்ற மதத்தையே அசிங்கப்படுத்துவதை தனது சுபாவமாக வைத்துள்ளனர்.
25,000 வருடப் பாரம்பர்யம் மிக்க விஞ்ஞானபூர்வமான இந்து தர்மத்தைவிட வெறும் 5 வருட ஆட்சியும் முஸ்லீம்களின்-கிறிஸ்தவர்களின் ஓட்டும் முக்கியமாகப்போய்விட்டது.ஆனால்,இந்து மதத்தை இழிவுபடுத்திவிட்டால் கிறிஸ்தவர்களும்-முஸ்லீம்களும்
மகிழ்ச்சியடைவார்கள் என மு.கருணாநிதி நினனத்துவிட்டார் போலும்.தனது மதத்தை முறையாகப் பின்பற்றும் எந்த கிறிஸ்தவனும் முஸ்லீமும்-பிற மத நிந்தனையை ஏற்றுக்கொள்ளமாட்டான்.

No comments:

Post a Comment